2025 மே 15, வியாழக்கிழமை

சுகாதாரத் தொண்டர் நியமனம்: ‘இழுபறிக்கு விரைவில் தீர்வு’

Editorial   / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பான இழுபறி நிலைமைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென, கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார். 

மன்னார் மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட சுகாதார தொண்டர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, இன்று (22) நடைபெற்றது. இதன்போதே, அமைச்சர் இவ்வாறு உறுதியளித்தார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுகாதாரச் சிற்றூழியர் நிரந்தர நியமனங்களில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் காரணமாக, நீண்ட காலமாக நிரந்தர நியமனத்தில் இழுபறி நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார். 

குறித்த தொண்டர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக, புதிய ஆளுநருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, இதற்கு தீர்வு காண்பதற்கு முயலவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அத்துடன், பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு, அவர்களது சேவை மூப்பின் பிரகாரம், முன்னுரிமை அடிப்படையில், நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமெனவும், டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .