2025 மே 14, புதன்கிழமை

சுதந்திர தினத்தில் மதுபானம் விற்றவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சுதந்திர  தினமான இன்று (04), யாழ்ப்பாணம் - நாச்சிமார் கோவில் பகுதியின்  பிரதான வீதியில் வைத்து, சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 250 மில்லி லீற்றர் கொள்ளளவுடைய 130 அதிவிசேட சாராய போத்தல்களும் ஓட்டோ ஒன்றும், சாராயம் விற்பனையின் மூலம் கிடைக்கப்பெற்ற 33,000 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குடும்ப வறுமையின் நிமித்ததே, தான்த சாராயத்தை விற்பனை செய்ததாக, கைதுசெய்யப்பட்ட நபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .