Editorial / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்
சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் விசாரணைக்குழுவினர் இன்று (11) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனமாக கடமையாற்றும் ஊடகவியலாளரிடமே இணையத்தள குற்றவியல் விசாரணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இணையத்தளம் ஒன்றில் இராஜாங்க அமைச்சர் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிடப்பட்டதாக, இராஜாங்க அமைச்சர் இணையளத்தள குற்றவியல் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், இன்று (11) யாழுக்கு வருகை தந்த இணையத்தள குற்றவியல் தொடர்பான விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025