2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

‘சுயாதீனமாகச் செயற்பட இடமிருந்தால் பரிசீலிப்பேன்’

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தொடர்ந்தும் சுயாதீனமாக அரசியலில் செயற்படுவதற்கு இடமிருந்தால், அதனைப் பரிசீலிக்க தான் தயாராக இரப்பதாகத் தெரிவித்த  வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் எஸ். தவராசா, இல்லையேல், அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது தொடர்பிலே சிந்திக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சபையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியில் தான் இது வரை தான் இருந்தாகவும் கட்சிக்குள் காணப்பட்ட முரண்பாடு காரணமாக, அவர்கள் தன்னைக் கட்சியில் இருந்து நீக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

அதனால் தான் அந்தக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது கூட்டுச் சேர்ந்தோ செயற்படவில்லையெனத் தெரிவித்த அவர், தான் தனித்துவமாக இயங்கி தனித்துவதத்தைக் காப்பாற்றியிருப்பதாகவும் கூறினார்.

 

அத்தகைய செயற்பாடுகளே, கட்சிக்கும் தனக்கும் இடையில் முரண்பாட்டைக் கொண்டு வந்திருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.

தன்னுடைய சுயாதீனத்தை விட்டுக் கொடுக்காமல், சுயாதீனமாகச் செயற்படலாம் என்றால் அதனையும் செய்ய தயாரெனவும் விட்டு விலகவும் தயாரெனவும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும், தன்னுடைய சுயாதீனத்துடன் தான் செயற்படுவதற்கு, அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுத்தால், அந்தக் கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுவதா அல்லது ஒதுங்கிக் கொள்வதா என்பதை அந்த நேரம் அதனைப் பார்த்துக் கொள்ளுவதாகவும் அவர் கூறினார்.

அதற்காக புதிய கட்சிகளை ஆரம்பிக்கும் எண்ணம் இல்லையெனவும் ஆனால், அழுத்தம் கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட எண்ணியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .