Editorial / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தம் நிறைவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், வட மாகாணத்தின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, மிகவும் மந்தமான கதியில் நகர்கிறதென, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுலாத் தின ஆரம்ப நிகழ்வு, யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று (26) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், வட மாகாணத்துக்கென 2017 - 2020 காலப்பகுதிக்கான தந்திரோபாயத் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும், இவ்வாண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதியில் இருந்து, சுற்றுலாப் பணியகம் என்ற ஓர் அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு, சுற்றுலாத்துறையின் அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறுப்புகளையும் நடவடிக்கைகளையும் அதனிடம் கையளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வட மாகாணத்தைப் பொறுத்தவரையில், இங்கு மிகக் கூடிய அளவிலான சுற்றுலா மய்யங்களும் புராதன சின்னங்களும் வரலாற்றுப் பதிவுகளும் மற்றும் இன்னோரன்ன பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களும் காணப்படுகின்றனவெனத் தெரிவித்த அவர், அவற்றை முறையாக வரிசைப்படுத்தி, எமது புராதன சின்னங்களின் வரலாற்றுப் பதிவுகளை, சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அத்துடன், வடபகுதியைச் சுற்றிவரவுள்ள மணற்பாங்கான கடற்கரைகள், சிறந்த சுற்றுலாத் தளங்களாக மாற்றப்படலாமென, அவர் மேலும் கூறினார்.
8 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago