2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சுழிபுரம் சிறுமி படுகொலை: சிறுவர்கள் இருவர் கைது

Editorial   / 2018 ஜூன் 30 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

சுழிபுரம் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பில், நேற்று (29) இரவு இருவர், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுழிப்புரம் பகுதியைச் சேர்ந்த டேவிட்  (வயது 18) மற்றும் சின்னராசா சிவதர்ஷன் (வயது 17) ஆகியோரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், இன்று (30) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், ஏற்கெனவே, அறுவர்கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய ஐவரும் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X