2025 மே 21, புதன்கிழமை

செஞ்சோலை நினைவு நாள்: ராஜபக்ஷர்களின் கோரமுகங்கள் வெளிப்பட்ட நாள்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

மாணவர்கள் மீது குண்டு வீசி கொலைசெய்து, ராஜபக்ஷர்கள் தங்கள் கோரமுகங்களை காட்டிய கொடூர நாள் தான், இந்தச் செஞ்சோலை நினைவு நா​ள் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு - செஞ்சோலையில் உயிர்நீர்த்த மாணவர்களின் 12ஆவது ஆண்டு நினைவு நாள், வள்ளிபுனம் இடைக்காட்டு சந்திப் பகுதியில் இன்று (14) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

ராஜபக்ஷர்கள் தங்கள் கோர முகங்களைக் காட்டிய கொடூர நாள் இதுவெனத் தெரிவித்த அவர், 10 ஆண்டுகள் கழித்துதான், அந்நாளை நினைவு கொள்கின்றோமெனவும் குறிப்பிட்டார்.

ஓர் இனப்படுகொலையை அப்பட்டமாக நிறைவேறிய இந்த நாளை மறந்துவிட முடியாதெனத் தெரிவித்த அவர், இதனை உலகுக்கு ஆண்டு தோறும் சுட்டிக்காட்டுகின்றோமெனக் குறிப்பிட்டதுடன், அதனால்தான் இந்த நிகழ்வுகளை நினைவுகொள்கின்றோமெனவும் தெரிவித்தார்.

இன்று, ராஜபக்ஷக்கள் மீண்டும் அரசாட்சியைப் பிடிக்கும் நோக்கில் தவித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அவர்கள் செய்த அராஜகங்கள் மறந்து போய்விடவில்லையெனவும் குறிப்பிட்டார்.

மஹிந்த ஆட்சியில், நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்திருந்தால், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருப்போமெனவும் தெரிவித்தார்.

அத்துடன், எமக்கான உரித்தைப் பெற்றுக் கொள்வதில், இன்றும் சிங்களதேசம் பின்னிக்கின்றதெனவும் இதற்கான பதிலை சிங்களதேசம் எதிர்காலத்தில் அறிந்து கொள்வார்களெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .