Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகளில், கம்பங்களை நிறுவி சேவைகளை வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள், பிரதேச சபையில் முறைப்படி அனுமதி பெற வேண்டுமென, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், வீதி ஓரங்களில் கம்பங்களை நிறுத்தி சேவைகளை வழங்குதல் தொடர்பான அறிவித்தலில், சபைக்குச் சொந்தமான வீதிகள், வீதி அபிவிருத்திசபை வீதி, அபிவிருத்தித் திணைக்களம் ஆகிய திணைக்களகங்களின் பரிபாலணத்துக்குட்பட்ட வீதிகளில் கம்பங்களை நிறுவி, சேவைகளை வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள் பிரதேச சபையில் முறைப்படி அனுமதி பெற்ற பின்பே, தமது சேவைகளை ஆரம்பித்தல் வேண்டுமெனவும், அவர் கூறினார்.
அனுமதியின்றி வீதிகளில் கம்பங்களை நடுதல் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மீறுவோர் மீது சபையினால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago