2025 மே 10, சனிக்கிழமை

சைவப்புலவர் பரீட்சைகளை நடத்த ஏற்பாடு

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இளஞ்சைப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைகள், ஒக்டோபர் 30, 31ஆம் திகதிகளிலும் நவம்பர் 1ஆம் திகதியிலும் நடைபெறவுள்ளன.

இதற்கமைய, ஒக்டோபர் 30ஆம் திகதி பிற்பகல் 1 - 4 மணி வரை சாத்திரமும், 31ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இலக்கியமும் அன்றைய தினம்  பிற்பகல் 1 – 4 மணி வரை  வரலாறும் நடைபெறும்.

மறுநாள் 1ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை,  இலக்கணமும், அன்றைய தினம் பிற்பகல் 1 - 4  வரை  உரைநடையும் நடைபெறவுள்ளன.

மேலும் பரீட்சைகள் யாவும் யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்திலும் மட்டக்களப்பு ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லுரியிலும் நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X