Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகர் பகுதி, பலாலி வீதி மற்றும் யாழ்.நகரில் இருந்து யாழ்.மாவட்ட செயலகம் வரையிலான கண்டி வீதி என்பவற்றில் பெருமளவான இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
யாழ்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ். ஆயர் இல்லத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். அடுத்து வட மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இவ்விரண்டு சந்திப்புக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.
அதனை அடுத்து மாலை 3 மணியளவில் யாழ். நகரில் தனியார் வங்கி ஒன்றினை திறந்து வைக்கவுள்ளார்.அடுத்து யாழ். மாநகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசிய கிறிஸ்மஸ் கரோல் தின நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ். வருகையை முன்னிட்டு முன்னரை விட இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
20 minute ago
26 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
50 minute ago