Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 21 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை இன்று (21) விடுவிப்பதாக ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் தமது காணிகளை மீட்க வந்த காணி உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வடக்கில் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை இன்று (21) மீள மக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைதீவில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஒட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காணி உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் யாரையும் இராணுவம் அவர்களது காணிக்குள் செல்ல அனுமதித்திருக்கவில்லை.
சுமார் மாலை 4 மணிவரை மக்கள் காத்திருந்த நிலையில், குறித்த காணிகள் நாளையே விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago