2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தியவர்களுக்கு அபராதம்

Gavitha   / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

தென்மராட்சிப் பகுதியில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான காரணியாக அமையும் வகையில் தங்களது காணிகளை வைத்திருந்த 22 பேருக்கு, சாவகச்சேரி நீதிமன்றத்தால் தலா 3,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி சுகாதார வைத்தியதிகாரி பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் கடந்த மாதம் தொடக்கம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்போது, டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்தவர்களுக்கு முதற்கட்டமாக எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது. அவ்வாறு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டும், அதனை செவிமடுக்காமல் தொடர்ந்தும் காணிகளை டெங்கு பரவக்கூடிய விதத்தில் வைத்திருந்தவர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

சங்கத்தானை, அல்லாரை ஆகிய இடங்களைச் சேர்ந்த 22 பேருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட மேலும் 17 பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .