2025 மே 01, வியாழக்கிழமை

‘த.தே.கூவுடன் இணைந்து செயற்பட முடியாது’

Princiya Dixci   / 2021 மார்ச் 07 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்பட மாட்டோம் என கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த தேர்தலின் போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும் கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு, கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஆதரித்து கையொப்பமிட்டு, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார். 

“இது தமிழ் மக்கள் மீது மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதுகில் குத்திய ஒரு செயற்பாடாகும். எனவே, இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக அனைத்து கட்சியையும், இணைப்பதாக இனி எந்த சிவில் சமூகத்தினரோ மதகுருமாரோ முன் வர வேண்டாம்.

“எனவே, அவ்வாறான முயற்சிகளை கைவிட வேண்டும் அத்தோடு நாமும் பாராளுமன்றத்தில் அல்லது வேறு செயற்பாடுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்றிலிருந்து சேர்ந்து பயணிக்க மாட்டோம்” என்றும்  அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .