Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
தீக்காயங்களுக்கு உள்ளாகி நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று திங்கட்கிழமை (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இணுவில் பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும், கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுதாகரன் லதுசாயினி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றதால், சக மாணவிகள் கேலி செய்துள்ளனர். இதனால் மனவிரக்தியடைந்த மாணவி, கடந்த 03ஆம் திகதி இரவு தனக்குதானே தீ மூட்டிக்கொண்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், உடனடியாக அவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
14 minute ago
36 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
36 minute ago
39 minute ago