2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தீவகங்களில் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

Princiya Dixci   / 2015 நவம்பர் 20 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தீவகப் பகுதிகளில் சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்களிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வரும் நிலையில், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். 

மேற்படி விடயம் தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ள அவர், தீவகப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை நிலையைப் பாதிக்கும் வகையில் அண்மைக்காலமாக அப்பகுதிகளில்  சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் இதில் வெளி நபர்கள் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்தும் எனக்கு அறிவித்து வருகின்றனர். இது ஆரோக்கியமான விடயமல்ல. ஏற்கெனவே இப்பகுதி மிகவும் கொடூரமான ஒரு கொலைக்கு காரணமாக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறை கொண்டு உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேநேரம், யாழ். குடா நாட்டில் சமூக விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த பலதரப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், ஒரு சில பகுதிகளில் அவை இன்னும் தொடர்வதாகவே அறிய முடிகிறது. இவை தொடர்பிலும் அவதானமெடுத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .