2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தனித்திருந்த தந்தை சடலம் மீட்பு

George   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

“வீட்டில் தனித்திருந்த நபர், குளியலறையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்”என, யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.

கொக்குவில் கிழக்கு பகுதியினை சேர்ந்த தம்பு சிவபாதசிங்கம் (வயது 81) என்ற நபரே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்துவருவதுடன், இந்த நபர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பொழுது விடிந்தும் வீட்டு மின்குமிழ் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருந்துள்ளதுடன், முதியவரின் நடமாட்டத்தினை காணவில்லை.

இதனால் சந்தேகம் கொண்ட அயலவர், வீட்டுக்குள் சென்று பார்த்த போது குளியல் அறையில், நபரின் சடலம் கிடந்துள்ளது.

இது  தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சடலத்தினை மீட்ட பொலிஸார், யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

மரண விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .