Editorial / 2020 ஜூன் 30 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், எஸ். நிதர்ஷன்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில், தபால் மூலம் வாக்களிப்பதற்கு, 24,829 பேர் தகுதி பெற்றுள்ளனரென, மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ், இன்று (30) தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்குசீட்டு பொதியிடும் பணி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், இன்று காலை ஆரம்பமானதாகவும் இந்தப் பணிகள், நாளை வரை நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல், கிளிநொச்சி மாவட்டத்தில், 3,590 ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர்களுக்கானப் பொதியிடும் பணிகள் மாவட்டச் செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனவும், அமல்ராஜ் தெரிவித்தார்.
இவ்வாறு பொதியிடப்பட்ட ஆவணங்கள், நாளை முதல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குக் கிடைக்கப்பெறுமெனத் தெரிவித்த அவர், எனவே நாளை முதல் கிடைக்கப்பெறும் பொதிகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் கூறினார்.
“ஜூலை 13ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான வாக்களிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 14, 15ஆம் திகதிகளில் ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறும். ஜூலை 16, 17ஆம் திகதிகளில் மாவட்டச் செயலகத்தில் முப்படையினர் பொலிஸாருக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்” எனவும், அவர் தெரிவித்தார்.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago