2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் குழப்பம்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்த யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் விடுவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்  உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் கூட்டம் நேற்று (07) மாலை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த ஒருவர் பல குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை முன்வைத்து குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த பொலிஸார் குழப்பத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .