2025 மே 21, புதன்கிழமை

‘தமிழர்களுக்கு நீதி கிடைக்காது’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

அரசாங்கத்தின் மாறுபட்ட நிலைப்பாட்டால், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காதென, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - கட்டைப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று (12) நடைபெற்ற ஊடகவியளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாற தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமென்ற உத்தரவாதத்தை வழங்கியதுடன், அரசாங்கத்துக்கு கால அவகாசத்தையும் பெற்றுக்கொடுத்ததாகவும் ஆனால் அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறொன்றாக இருப்பதாதகவும் குற்றஞ்சாட்டினார்.

அதாவது, இராணுவத்தைக் காப்பாற்றுவதற்கென புதிய யோசனை ஒன்றை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகத் குறிப்பிட்டதுடன்,  எனவே, இது தொடர்பாக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இவ்வாறான நிலையில், இராணுவத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசதரப்பினர்கள் முனைவதானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நீதியை, நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க, இவர்கள் தயாராக இல்லை என்பதையே வௌிப்படுத்துகிறதென, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X