2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு

Freelancer   / 2023 ஜூன் 14 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன் 

வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி, சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று (13) நடைபெற்றது. இதன்போதே குறித்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “1994ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வழங்குவதாக கூறி குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால், தற்போது வரை அந்த மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை. 

“ஆனால், ஒதுக்கப்பட்ட காணிகளில் 75 சதவீதமான காணிகள், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை சேர்ந்த பெரும்பாண்மையின சிங்கள மக்கள் அபகரித்திருக்கின்றார்கள்.

“இதேவேளை, எமது  மதுராகநகரை சேர்ந்த பொதுமக்கள் தெற்கு சிங்கள பிரிவிற்குள் சென்று குடியேறுவதற்காக சிறு துண்டு காணியை கேட்டபோது, அதற்கு அந்தப் பகுதியில் உள்ள பௌத்த மதகுரு சம்மதித்தால் தான் இவர்கள் தமது பிரிவிற்குள் வரமுடியும் என்று மாவட்டச் செயலக மட்டத்தில் அன்று எனக்கு பதில் வழங்கப்பட்டது.

“ஆனால், தற்போது 250 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட காணிகளை தெற்கில் இருக்கும் மக்கள் அபகரித்திருக்கின்றார்கள். எனவே, வீரபுரம் மக்களுக்கு அந்த காணிகள் வழங்கப்பட வேண்டும்” என்றார். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X