Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜூன் 24 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவன் , தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக தெரிவித்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தான்.
சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவன் எனவும், அவனது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும், இங்கு இலங்கையை சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு, கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால் , பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளான்.
மேலும், சிறுவனின் தாயை பொலிஸார் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில்,சிறுவன் செய்யும் தவறுகளுக்கு தான் சிறுவனை தண்டிப்பதாக தாயார் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த பொலிஸார் , சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
4 hours ago