2025 மே 12, திங்கட்கிழமை

தாய், மகன் மீது தாக்குதல்

Editorial   / 2018 ஜூலை 15 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அருகில், நேற்று (14), பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வட்டுக்கோட்டை - சங்கரத்தைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் மற்றும் அவரது 6 வயது மகன் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்தப் பெண், நாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான, ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் உதவியாளரென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,  

குறித்தப் பெண், நேற்று முன்தினம் (14) தனது மகனுடன் வட்டுக்கோட்டை - கோட்டைக்காடு வைத்தியசாலைக்குச் சென்று வீடு திரும்பும் போது, இனந்தெரியாத கும்பலொன்று அவர்களை வழிமறித்து, இரும்புக் கம்பிகளைக்கொண்டு தாக்கியுள்ளது. 

குறித்த தாக்குதலில் தலையில் படுகாயமடைந்தப் பெண், அவ்விடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.  

இதையடுத்து, தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 

இதன் பின்னர், வீதியில் வந்தவர்கள் மயக்கமடைந்திருந்த பெண்ணையும் காயங்களுக்கு உள்ளான அவரது மகனையும் மீட்டு, கோட்டைக்காடு வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

இதையடுத்து, குறித்தப் பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X