2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

திருமணம் செய்த மணமகனுக்கு அபராதம்

Niroshini   / 2021 ஜூன் 24 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில், சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றம், நேற்று (23) உத்தரவிட்டுள்ளது.

ஜுன் 4ஆம் திகதியன்று நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது, அதிகளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த சுகாதார பிரிவினர், மணமக்கள் குடும்பத்தினர் உட்பட திருமணத்தில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தினர்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட 78 பேருக்கு, கடந்த 16ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 13 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையில், சுகாதார பிரிவினரிடம்  திருமணத்துக்கான அனுமதியை மணமகனே பெற்றிருந்தமையால், மணமகனை பிரதிவாதியாக குறிப்பிட்டு. அவருக்கு எதரிhக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மணமகன் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, மணமகனை கடுமையாக எச்சரித்த நீதவான், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதேவேளை, மணமகனின் சகோதரர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், சுகாதார பிரிவினரின் அனுமதியின்றி வெளிநாடு சென்றுள்ளார். அவர் தொடர்பான தகவல்களையும் சுகாதார பிரிவினருக்கு வழங்கி அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறும், மணமகனுக்கு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .