2025 மே 10, சனிக்கிழமை

திலீபனின் திருவுருவப் படங்கள் அகற்றப்பட்டன

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

நல்லூரில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில், நிகழ்வுகளுக்கு நேற்றைய தினம் நீதி மன்றம் தடை விதித்திருந்தது.

இதனையடுத்து நேற்று மாலை முதல் நல்லூரிலும் யாழ். பல்கலைக்கழகத்திலும் இருந்த திலீபனின் திருவுருவ படங்கள், பதாகைகள், கொடிகள் என்பன அகற்றப்பட்டு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், அவ்விடங்களுக்கு யாரும் சென்று வருவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடக்வியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு பொலிஸிரால் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X