2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திவாகரன், பபில்ராஜ் இருவரும் விடுதலை

Editorial   / 2022 நவம்பர் 29 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் , நிதர்ஷன் விநோத்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப்   பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ந.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ். பபில்ராஜ் ஆகிய இருவரும், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரிலேயே இவ்விருவரும் முழுமையாக விடுதலைச் செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.

அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதனை அடுத்து அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு தவணைகளின் விசாரணைகளின் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

 அவர்கள் இருவரும்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான இருவரும் தமக்கு சட்ட உதவிகளை வழங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கே. சயந்தன் ஆகியோருக்கு நன்றி  தெரிவித்துள்னர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .