2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘தீர்வு கிட்டும் வரை போராட்டம் தொடரும்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 செ.கீதாஞ்சன்

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படுமென, வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள், தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடற்றொழிலாளர்களுடன் இணைந்து உறுதுணையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், ஊடகங்களுக்கு நேற்று a(04) கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு கடலில், சனிக்கிழமையன்று (04) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு ஒன்றை, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் மறித்துக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனரெனவும், அவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள், திருகோணமலை - விஜிதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரியவந்துள்ளதெனவும், அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியபோது, "யாரைக் கேட்டு அவர்களைப் பிடித்துள்ளீர்கள்?" என பொலிஸார், முறைப்பாடு வழங்கியவர்களிடம் கேட்டுள்ளனரெனவும், இதுதான் நிலைமையெனவும் அவர் கவலை வௌியிட்டார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கின்றார்கள் இல்லையெனவும், அவர்களைக் கடற்றொழிலாளர்கள் பிடித்துக்கொண்டுவந்தாலும், அதனை ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லையெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .