2025 மே 02, வெள்ளிக்கிழமை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 மார்ச் 22 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவருக்கு, கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - சுதுமலையைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கே, இவ்வாறு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று (21) மாலை, அந்த வயோதிபப் பெணிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவருக்கு மருத்துவ சேவை வழங்கிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 எனினும், பிசிஆர் பரிசோதையின் பின்னரே, அவர் கொவிட்-19  சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வயோதிபப் பெண், கடந்த வாரம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று (21) ஏற்பட்ட திடீர் மூச்சுத் திறனலையடுத்து, அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .