Editorial / 2024 மே 01 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
ஏ9 பிரதான வீதி தென்மராட்சி நுணாவில் பகுதியில் புதன்கிழமை (01) காலை 5:45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ் விபத்தின் போது லேண்ட் மாஸ்ரரில் பயணித்த ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் மோசமான காயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐயேஸ் வேனில் பயணித்த சிறுமி ஒருவர் மற்றும் லேண்ட் மாஸ்ரர் சாரதி ஆகியோர் சிறு காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டவர்களை கொழும்பில் இருந்து ஏற்றிக் கொண்டு யாழ். நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஐயேஸ் வான் சாரதி நித்திரை கலக்கத்தின் காரணமாக முன்னே பயணித்துக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் பின்னால் சென்று மோதித் தள்ளி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
50 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
11 Jan 2026