2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தென்மராட்சியில் 5,000 ஏக்கரில் நன்னீர் மீன்வளர்ப்பு

Editorial   / 2018 ஜூலை 23 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

தென்மராட்சியில், இனங்காணப்பட்ட பிரதேசங்கள் சிலவற்றை உள்ளடக்கும் வகையிலான சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், நன்னீர் மீன்வளர்ப்பை முன்னெடுக்கவுள்ளதாக, சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.

பொதுமக்கள் மட்டத்திலும் பிரதேச சபை உறுப்பினர்கள் மட்டத்திலும், வீதிகளைப் புனரமைத்தல், வீதி விளக்குகளைப் பொருத்துதல், கழிவுகளை அகற்றுதல் ஆகியனவே பிரதேச சபையின் பணிகள் என்ற பொதுவான நிலைப்பாடு உள்ளதாகவும் ஆனால், எமது பிரதேசங்களை அபிருத்திச் செய்வதற்கு, எமது பகுதிகளிலேயே பல்வேறுபட்ட முதலீடுகளை உருவாக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.

அந்த வகையில், சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், நன்னீர் மீன்வளர்ப்பு மேற்கொள்ளக்கூடியப் பிரதேசங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கமைய, மட்டுவில் - சந்திரபுரம் பகுதியில், சுமார் 1,500 ஏக்கர், கைதடியில் சுமார் 1,500 ஏக்கர், தனங்கிளப்பில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பென, மொத்தமாகச் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில், நன்னீர் மீன்வளர்ப்பு நடவடிக்கைக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், தவிசாளர் குறிப்பிட்டார்.

இதற்கான திட்ட வரைவும் உத்தேச செலவீனங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்தத் திட்ட வரைவைத் தொடர்ந்து, உரிய அனுமதிகளுடன் இதற்கான நிதிமூலங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது அல்லது முதலீட்டாளர்களை எவ்வாறு இனங்காண்பதென்பது தொடர்பான ஆலோசனைகள், தொடர்ந்து இடம்பெற்று வருவதாக, அவர் மேலும் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .