2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தேவாலயத்துக்குள் சென்ற இளைஞன் கைது

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா - இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து, முஸ்லிம் இளைஞன் ஒருவர், நேற்றிரவு (31) வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி - அக்குரனை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில், நேற்று குறித்த தேவாலயத்தில், இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில், சந்தேகத்துக்கிடமான முறையில் குறித்த இளைஞன் தேவாலயத்துக்குள் சென்றுள்ளார்.

இதன்போது, அவர் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .