Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டும் உரிமைக்காக போராடிக் கொண்டும் இருக்கின்ற வேளையில், நாட்டில் சம உரிமையோடு வாழ்வதற்கு தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தொடர்ந்தும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும்” என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டுக்கான மீளத் தேசிய விழா, யாழ்ப்பாணத்தில் நேற்று (23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“ஐனநாயக, அரசியல், சமுக விழுமியங்கள், மனிதாபிமானம், மனித உரிமைகள் பற்றி எல்லாம் நபிகள் நாயகத்தின் அந்தக் கோட்பாடுகள் இருக்கின்றன. அந்தக் கோட்பாடுகள் எல்லாம் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்து, இஸ்லாம், கிறித்தவ மக்களுக்காக இருக்கலாம். அதனடிப்படையில், தங்களுடைளய நாட்டில் தாம் வாழ்கின்ற மண்ணில் சக உரிமை உள்ளவர்களாக மக்கள் வாழ வேண்டும் என்பதில், நபிகள் நாயகம் வெற்றிப் பெற்றுள்ளார்.
“வாழ்க்கையில் துன்பப்பட்டவர்கள் அல்லது அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் துன்ப, துயரங்களை அனுபவிப்பவர்கள் எங்கு வாழ்ந்தாலும், ஒன்றுபட்டு அந்த உரிமைக்காகப் போராடுகின்றார்கள், போராடுபவர்களாக இருக்கின்றார்கள்.
“அந்தக் காலங்களில், முஸ்லிம் தலைவர்கள் எம்மோடு இணைந்து செயற்பட்டிருக்கின்றார்கள். யாழில் ஆட்சியில் ஆளுபவர்களாக இருந்திருக்கிறார்கள். தந்தை செல்வா வழிகாட்டிலில், அல்லாவின் போதனையில் செயற்பட்டவராக இருக்கின்ற அஸ்ரப் அவர்களை நாம் மறந்துவிடவில்லை" என்றார்
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago