2025 மே 09, வெள்ளிக்கிழமை

’தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன்’

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காகவே நான் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து போராடுவேன் எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்,  கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் ஆவானெனவும் கூறினார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கட்சிக்குள் நடந்த உள்ளக முரண்பாடுகள் தற்போது உச்சமடைந்து தன்னை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்களென்றார்.

“கடந்த பத்தாண்டுகளில் கட்சியை விட்டு விலக்கப்பட்டவன் நான் தான். இதுவரை பலர் பல மோசமான குற்றங்களை புரிந்தவர்களை கூட கட்சியை விட்டு நீக்காத நிலையில் முதல் முதலாக என்னை நீக்கியுள்ளார்கள்” எனவும், அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X