Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 ஏப்ரல் 07 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கல்லால் அடித்துக் கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பருக்கு மரண தண்டனை விதித்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று வெள்ளிக்கிழமை (7) தீர்ப்பளித்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி, நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி, வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றவேளை, கடத்தி செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் எனும் நபர், நெடுந்தீவு பொலிஸாரால்; சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள், யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.
இது தொடர்பான சாட்யசிப் பதிவுகள், நேற்று வியாழக்கிழமையுடன் (06) நிறைவடைந்தன. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய தீர்ப்பு அறிவிப்பின் போது, சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திக் கொலை செய்தமைக்காக, குற்றவாளியான கந்தசாமி ஜெகதீஸ்வரனுக்கு நீதிபதி, மரண தண்டனை விதித்தார்.
அத்துடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்டத்தவறின் 1 வருட சிறைத்தண்டனையும் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கவேண்டும் எனவும் கட்டத்தவறின் 5 வருட சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
48 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
4 hours ago