Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பருத்தித்துறை நீதிமன்றில் அலைபேசி மற்றும் சீ.டி.எம்.ஏ தொலைபேசியுடன் வழக்கு விசாரணைகளுக்கு வந்த 8 பேருக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, நேற்று திங்கட்கிழமை (21) தீர்ப்பளித்தார்.
நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று கொண்டிருந்த போது, வழக்கு விசாரணைக்கு வந்திருந்த பெண் ஒருவரின் கைப்பையில் இருந்த சீ.டி.எம்.ஏ தொலைபேசி அதிக சத்தத்தில் ஒலித்தது.
இதன்போது குறித்த பெண்ணை கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், நீதிமன்றத்துக்கு வந்த அனைவரின் அலைபேசிகளையும் பறிமுதல் செய்யுமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட அலைபேசி, மற்றும் தொலைபேசி உரிமையாளர்கள் 8 பேருக்கும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அனைவரையும் கடுமையாக எச்சரிக்கை செய்த நீதவான், 1,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
கடந்த 18ஆம் திகதி நீதிமன்றில் தொலைபேசியுடன் வந்திருந்த 26 நபர்களுடைய அலைபேசியினை பறிமுதல் செய்த நீதவான் கடுமையாக எச்சரிக்கை செய்து அபராதம் விதித்திருந்தார்.
இதன் பின்னர் நீதிமன்றவளாகத்துக்குள் அலைபேசியுடன் வருவதனை தவிர்க்குமாறு நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .