2025 ஜூலை 31, வியாழக்கிழமை

நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தில் கைதான மூவருக்குப் பிணை

Gavitha   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் மூவருக்கு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், புதன்கிழமை (09) பிணை வழங்கினார்.

5 இலட்;சம் ரூபாய் பெறுமதியான தலா ஐந்து ஆட்பிணையில் செல்வதற்கு ஒவ்வொருவரும் நீதவான் அனுமதியளித்தார்.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 23 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டமை, பொலிஸாரை அடித்துக் காயப்படுத்தியமை மற்றும் சிறைச்சாலை வாகனங்களை சேதமாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இவர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவர்களுக்கொதிரான வழக்கு, புதன்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 3 பேருக்கு பிணை வழங்கப்பட்டதுடன் மிகுதி 20 பேரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .