2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நகைகளை திருடிய இளைஞன் கைது

Freelancer   / 2022 நவம்பர் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய சந்தேகநபர் ஒருவர்  இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருடிய நகைகள் சிலவற்றினை நகை கடையில் அடகு வைத்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X