Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லூர் கந்த சுவாமி கோவில் தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களின் நகைகளைத் திருடி இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பெண்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டை உரிய முறையில் முன்வைக்க பொலிஸார் தவறியதால், சந்தேகநபர்களை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தத் திருவிழா வியாழக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. அதில் இலட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதன்போது, 20க்கும் மேற்பட்டோரிடம் நகைகள் அபகரிக்கப்பட்டிருந்தன. சுமார் 45 தங்கப் பவுண் நகைகள் திருட்டுப் போயிருந்தன என்று முறைப்பாடுகள் கிடைத்தன என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தத் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் முழங்காவிலைச் சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பொலிஸாரின் கைதுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதவான் அந்தோணி சாமி பீற்றர் போல், சந்தேகநபர்கள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்து உத்தரவிட்டதுடன், வழக்கை ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025