2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாகவே இழந்தவற்றை தமிழர்கள் பெற்றார்கள்’

Editorial   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

யுத்த காலத்தில் இழந்தவற்றை, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாகத்தான் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டார்களென, முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதியை, இன்று (09) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை, பல்வேறுபட்ட விளையாட்டுக் கழகங்களுக்கும் பாடசாலைகளுக்கும்  விளையாட்டு உபகரணங்கள், மைதானப் புனரமைப்புக்கான நிதிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களிலும், இவ்வாறான உதவிகளை வழங்குவொனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X