Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“பாலன் பிறப்பிலும் புத்தாண்டிலும், எங்களைத் தெருவில் இந்த அரசாங்கம் நிற்க விட்டிருக்கின்றது” என, கிளிநொச்சி - இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – இரணைதீவுப் பகுதியில், தங்களை மீள் குடியேற்றவும் அங்கு சுதந்திரமாகத் தொழில் செய்யவும் அனுமதிக்கக் கோரி முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (21) 235ஆவது நாட்களாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நாங்கள் எல்லோருமே கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக நந்தார் பண்டிகையை எங்களுடைய சொந்த மண்ணிலே கொண்டாட முடியாத நிலை காணப்படுகிறது. இந்த வருடம் நத்தார் தினத்தில், எங்கள் ஊரில் நாங்கள் நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தோம். இன்னும் நாத்தார் பண்டிகைக்கு நான்கு நாட்களே இருக்கின்றன. ஆனால், எங்களது நிலத்தை விடுவதற்கு, நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
“கிறிஸ்துவின் பிறப்பிலும் புதுவருடத்திலும் நாங்கள் வாழ்வாதாரத் தொழில் இன்றி, வருமானம் இன்றி, சொந்த நிலம் இன்றி வீதியில் போராடுகின்றோம். கடந்த கால அரசாங்கத்பை் போன்றே, இந்த நல்லாட்சி அரசாங்கமும் எங்களை ஏமாற்றுகின்றது” எனத் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago