Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 12 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
நல்லாட்சி அரசாங்கக் காலத்தின் போது, 80 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என, இலங்கைத் தமிழரசுக் கட்சயின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஊரெழு - திலீபன் வீதியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை, இன்று (12) பயனாளியிடம் கையளித்தப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், போர் முடிவடைந்தப் பின்னர், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், வடக்கு, கிழக்கில் வீட்டுத் திட்டங்களை முன்னெடுத்ததாகக் கூறினார்.
அதில், அதிகளவான வீடுகள், காங்கேசன்துறை பகுதியில் அதிகளவு வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த மாவை சேனாதிராஜா, இன்னும் கல வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடிவுறாத நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
அதை விட, காங்கேசன்துறையில் பெரிய துறைமுகம் நிறைவேற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், அதை விட தங்களுடைய கோரிக்கையாக பலாலி விமானப்படைத் தளம், சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
இதனால், புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள் அனைவரும் இலகுவாக வந்து செல்லவும் தமது வர்த்தக நடவடிக்கைளை மேற்கொள்ளவும் வாய்ப்பாக அமையுமெனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
8 hours ago
9 hours ago