2025 மே 09, வெள்ளிக்கிழமை

நல்லிணக்க மய்யம் திறந்து வைப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

இருபாலை பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்கம் மய்யம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

பலாலி படைத்தளத்தின் 51ஆவது பிரிவின் மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, நல்லிணக்க மய்யத்தைத் திறந்து வைத்தார்.

இந்த நல்லிணக்க மய்யத்தின் ஊடாக எதிர்காலத்தில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக மாணவர்களுக்கான இரண்டாம் மொழி கற்கை, கலை கலாசார நிகழ்வுகள், இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் போன்றன மேற்கொள்ளப்படும் என, நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம விருந்தினர் மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X