2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நல்லிணக்கத்தை வேண்டி…

Editorial   / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் 

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி மௌஹமட் அலி என்ற இளைஞன் மூன்று சில்லு துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

தமிழ் மாற்று திறனாளிக்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் குறித்த பயணம் இன்று (01) காலை 9 மணிக்கு யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பயணத்தில் கொழும்பு நோக்கி செல்லும் மாற்று திறனாளி கொழும்பிலிருந்து இதர பகுதிகளுக்கும் சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி பணிக்கவுள்ளார்.

இந்த பயணத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் சமாதானம் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக்கப்படவேண்டும், மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகள்  பாதுகாக்கப்படவேண்டும் என மௌஹமட் அலி கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X