Freelancer / 2023 மார்ச் 02 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி மகாசிவராத்திரி தினத்தன்று அதிகாலை வேளை நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று புதன்கிழமை (02) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். (N)
40 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
57 minute ago