2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

நல்லூர் மகோற்சவப் பெருவிழா; ஆலயத்தை வந்தடைந்தது கொடிச்சீலை

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, நாளை (16) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு, இன்று (15) நடைபெற்றது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல்மடம் முருகன் ஆலயத்தில், நேற்றுக் காலை 9 மணிக்கு நடைபெற்ற விசேட பூஜை, வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கிருந்து சிறிய இரதத்தின் மூலம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு கொடிச்சீலை கொண்டவரப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அங்கு ஆலயத்தின் வெளி வீதி உலாச் சென்று, சுபநேரத்தில் பூஜைகள் இடம்பெற்று, நல்லூர் ஆலயப் பிரதம குருக்களிடம் கொடிச்சீலை கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா, நாளை(16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். தொடர்ந்து 25 நாள்கள் மகோற்சவப் பூஜைகள் இடம்பெற்று, எதிர்வரும் 08ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 09ஆம் திகதி தீர்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .