2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“நல்லைக் கந்தன்” மலர் வெளியீடு

எம். றொசாந்த்   / 2019 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண மாநகரசபை, சைவ சமய விவகாரக் குழுவினால் வருடாந்தம் நல்லூர் கந்தசுவாமி ஆலய உற்சவ காலத்தில் வெளியிடப்படும் “நல்லைக் கந்தன்” மலரின் 27 ஆவது இதழின் வெளியீடும், யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று (19) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனேல்டும், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி அ.எழிலரசியும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாநகரசபை, சைவ சமய விவகாரக் குழுவினால் வழங்கப்படும் “யாழ் விருது”, இவ்வருடம், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X