2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நாயால் தகராறு: நால்வருக்கு மறியல்

Editorial   / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வளர்ப்பு நாயால்  அயலர்வர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடால் ஏற்பட்ட கைகலப்பில்  3 பெண்கள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவவுக்கமைய, விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.

அத்துடன், இச்சம்பவத்தில், இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர், செம்மணி வீதியில் செட்டத்தெரு தோட்டம் பகுதியில், கடந்த வாரம் இரு குடும்பாத்தருக்கு இடையே வளர்ப்பு நாயால் முரண்பாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் நாய் வளர்க்கும் குடியிருப்பாளரின் மனைவி மற்றும் அவரது மகன், மகள் மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை ஒன்றுக்காகச் சென்றுவிட்டு நேற்று

புதன்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

அவர்களை வீட்டு வாசலில் வைத்து இடைமறித்த அயல் வீட்டில் வசிக்கும் சிறுமி உள்ளிட்ட பெண்கள் மூவரும் ஆண் ஒருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், தாயும் அவரது பிள்ளைகள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்,  

தாக்குதல் நடத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சிறுமி உள்ளிட்ட பெண்கள் மூவரையும் ஆண் ஒருவரையும் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் நால்வரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் பொலிஸார் நேற்று முற்படுத்தினர்.

சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க பொலிஸார் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

வழக்கை விசாரித்த பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம், சந்தேகநபர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், சிறுமியை அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X