Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், விசர் நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்ற குடும்பஸ்தர் ஒருவர், நேற்று (05) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், புதுக்குடியிருப்பு – உடையார்கட்டுப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பசுபதி சந்திரலிங்கம் (வயது 50) என்பவராவார்.
சில நாள்களுக்கு முன்னர், குறித்த நபர் விசர் கடிக்கு இலக்காகி, அதற்கான சிகிச்சையைப் பெறவில்லை.
இந்நிலையில், நேற்று (05) காலை, குறித்த நபருக்கு திடீரென கால் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த நபர் புதுக்குடியிருப்புப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார்.
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
10 minute ago
15 minute ago