2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நாளை போராட்டம்: மாணவர் ஒன்றியம் அழைப்பு

Freelancer   / 2022 நவம்பர் 01 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நாளை (02) தெல்லிப்பழையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,
வடகிழக்கில் தொடர்சியாக காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்தவகையில் வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராடவேண்டிய தேவையுள்ளது.

ஆகவே தமிழர்களின் உரிமைகளுக்காக  தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கூடிய மதகுருமார், சிவில் அமைப்புக்கள்,அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி பங்கெடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X