Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 10 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாவகச்சேரி நகர் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் அனுமதித்துள்ளார்.
சவகச்சேரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடந்த 19ஆம் திகதி புகுந்த கொள்ளையர்கள் காசாளரை மிரட்டி 18 இலட்சத்து 91 ஆயிரத்து 140 ரூபாயை கொள்ளையிட்டு தப்பி சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நிதி நிறுவனத்தின் பெண் காசாளரே தனது காதலன் மற்றும் நண்பனுடன் இணைந்து திட்டமிட்டு கொள்ளை நாடகத்தை அரங்கேற்றினார் என குற்றம் சாட்டி மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நேற்று (09) செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அந்நிலையில், நேற்று (09) மன்றில் முற்படுத்தப்பட்ட போது, அவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.
அதனை ஆராய்ந்த நீதிவான் மூவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025