2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

நிரூபித்தால் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பேன்

Editorial   / 2022 பெப்ரவரி 01 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

கோடிகளுக்கு அடிமைப் படாத என்ன திருடன் எனக் கூறி வருபவர் அதை நிரூபித்தால், எனது சொத்துகளை அடிமை சாசனம் எழுதி அவருக்கு வழங்குவேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர் விடுதலைக் கூட்டணியின் வரலாறு தெரியாதவர்களும் கட்சியின் வயதின் கால்பங்கு கூட வரதாவர்களுமே, இப்பழம்பெரும் கட்சியை அபகரிக்க முயன்றனர்.

“தமிழர் விடுதலைக் கூட்டணி மக்களுடைய சொத்து. நான் பதவிகளுக்கு கோடிகளுக்கு ஆசைப்பட்டவன் கிடையாது. அன்று நான் நினைத்திருந்தால் பதவிக்காக எதையும் செய்திருக்கலாம். ஆனால், கொள்கையுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காக நான் பதவிகளை ஏற்கவில்லை.

“எனினும், தற்போது எனது கட்சியை அபகரிப்பதற்காக கட்சி தொடர்பில் அறியாதவர்களும்  கொள்கை தொடர்பில் அறியாதவர்களும் கூட்டம் கூடி தமக்குள்ளே நிர்வாகம் தெரிவு செய்கிறார்கள்.

“காட்சியில் யார் அங்கத்துவம் உடையவர்கள் எனக“ கூறும் அதிகாரம் எனக்கே இருக்கிற நிலையில், கட்சியின் கோப்புகளும் என்னிடமே இருக்கின்றன.

“ஒருவர் தன்னை உப தலைவர் என்கிறார் நான் நியமிக்கவில்லை தானே பெயரை கூறிக்கொண்டு அவர் பின்னால் ஒரு குழு வருகிறது கட்சியை எம்மிடம் தாருங்கள் என.

“புதிய நிர்வாகக் குழுவை எண்ணி விழுந்து விழுந்து சிரித்தேன், அழுதேன். என்னுடைய வாழ்நாளில் இப்படியும் ஒரு சம்பவம் நடக்கிறது என.

“நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை யாருடைய பணத்தையும் அபகரிக்க வில்லை அதனால்தான் கடவுள் என்னை  88 வயதிலும் நடமாடித் திரிய வைத்திருக்கிறான்.

“எனவே, தமிழர் விடுதலைக் கூட்டணியை சரியான முறையில் ஒழுங்கமைக்கும் வரை யாருக்கும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன் முடிந்தால் காட்சியை அபகரிக்க நினைப்பவர்கள், தமது அங்கத்துவத்தை உறுதிப்படுத்தட்டும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .